" அதிமுகவில் ராஜ மரியாதை...? திமுகவில் நடவடிக்கையா...? " - கே.எஸ்.அழகிரி.

" அதிமுகவில் ராஜ மரியாதை...?  திமுகவில் நடவடிக்கையா...? " - கே.எஸ்.அழகிரி.

அதிமுகவில் ராஜ மாரியாதை தந்து விட்டு திமுகவிற்கு வந்த பின் நடவடிக்கை என்பது அரசுக்கு தொந்தரவு தருவது  என கே.எஸ். அழகிரி கூறியுள்ளார். 

சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களிடம் பேசுகையில், 

முதலமைச்சர் அனுப்பிய அமைச்சரவை பரிந்துரைகளை ஆளுநர் திருப்பி அனுப்பி உள்ளதை குறிப்பிட்டு, மாநில அரசின் பரிந்துரைகளை ஆளுநர் ஏற்றுக் கொண்டால் தான் ஆச்சுரியப்பட வேண்டும் என்றும், மத்திய மோடி அரசு என்ன சொல்லி அனுப்பி உள்ளதோ அதை செய்து கொண்டு இருக்கிறார் என்று விமர்சித்தார்.

மேலும், அம்பை ஏய்தவர்களை தான் பேச வேண்டும் என்றும்,  அம்பை பேசி பிரயஜோனம் இல்லை என்றும் கூறினார். அதோடு, கூட்டாட்சி முறையை ஆளுநர் தெரிந்து கொள்ள வேண்டும் என கூறினார். 
தொடர்ந்து,  பேசிய அவர், முதலமைச்சருக்கு தனது அமைச்சரவை மாற்றி நியமிக்க உரிமை உண்டு எனக் குறிப்பிட்டு, மரபுக்காக தான் ஆளுநர் கையெழுத்து என்றும், அமைச்சர்களை  முதலமைச்சரே நியமித்து கொள்ளலாம். முதலமைச்சரை ஒன்றும் செய்ய முடியாது என்றும் கூறினார். 

தொடர்ந்து, " கவர்னர் ஒத்துழைக்கவில்லை என்றால் அரசும் ஒத்துழைக்காது ,  தமிழக காவல்துறையை கூட திரும்ப பெறலாம். சி.ஆர்.பி.எப். வைத்து கொள்ளலாம். தமிழக நிர்வாக ஐ.எஸ்.ஏ. அதிகாரிகளை திரும்ப பெறலாம். மத்திய அரசு அதிகாரிகளை தான் வைத்து கொள்ள முடியும். இது போன்ற சம்பவங்கள் பல மாநிலங்களில் நடந்து உள்ளது" என்று கூறினார். 

இதையடுத்து, " ஆளுநரை அழைக்காமலேயே சட்டமன்றம் நடந்து உள்ளது என்று கூறியவர்,  தமிழகத்திற்கு கலாச்சாரம், பண்பாடு உள்ளது என்றும், ஆளுநரின் செயலை தமிழ் சமூகம் அனுமதிக்காது" என்றும் கூறினார். 

மேலும், தமிழகத்தில் ராகுலை 71 சதவீதமும் மோடியை 21 சதவீதமும் ஆதரிப்பதாக கருத்து கணிப்பு வந்து உள்ளது என்று குறிப்பிட்டார். மோடியின் வீழ்ச்சிக்கு ஆளுநர் ரவி, அண்ணாமலை தான் காரணம், இவர்கள் செய்த செயல்களால் மத்திய அரசு மீது மக்களுக்கு வெறுப்புணர்ச்சி ஏற்பட்டு உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், முதலமைச்சர் கைது செய்யப்படுவார் என அண்ணாமலை சொல்ல  அவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என கேள்வி எழுப்பினார்.  மோடி, ஆளுநர் கைது செய்யப்படுவார்கள் என நான் சொன்னால்  என்னை  பையத்திக்காரன் என நினைப்பார்கள் என விமர்சித்தார்.  அண்ணாமலை பேசுவது சட்டப்படி குற்றம். வேறு மாநிலங்களில் வைத்து கொள்ளலாம். ஆனால் தமிழ்நாட்டில் அது நடக்காது என்றும் விமர்சித்துள்ளார்.

அதிமுக, ஆட்சியில் இருந்த போது, செந்தில் பாலாஜி ஊழல் செய்தால் விசாரிக்கின்றனர் என்றால் அதிமுக ஆட்சியில் இருந்த மற்ற அமைச்சர்களை ஏன் விசாரிக்கவில்லை. அதிமுக ஆட்சியில் இருந்த அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு தாக்கீது தந்தும் ஏன் ஆளுநர் அனுமதி தரவில்லை என கேள்வி எழுப்பினார். . நேர்மையாக செய்ய வேண்டும் என்றால் எல்லாவற்றிலும் நேர்மையாக இருக்க வேண்டும். அதிமுகவில் ராஜ மரியாதை தந்து திமுகவிற்கு வந்து விட்டதால் நடவடிக்கை எடுப்பது அரசுக்கு தொந்தரவு தர வேண்டும் என்ற நோக்கத்தில் தானே? என கேள்வி எழுப்பியுள்ளார்.

உலகத்தில் மின்சார தடை ஏற்படாத நாடு இருக்கா. அமீத்ஷா வந்த போது மின்சாரம் கட் ஆகி இருக்கலாம். தமிழகத்தில் மலிவான அரசியலா நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


இதையும் படிக்க   | "கைது நடவடிக்கைகளுக்கு திமுக ஒருபோதும் அஞ்சியதில்லை" - ஆர்.எஸ். பாரதி.