நாளை அரங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் .. பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்ட ஆட்சியர், காவல் ஆணையர்

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் தொடர்பான முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

நாளை அரங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் .. பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்ட ஆட்சியர், காவல் ஆணையர்

தஞ்சை களிமேடு கிராமத்தில் கோவில் தேர்பவனியின் போது உயர் அழுத்த மின்கம்பி மீது உரசி தீவிபத்து ஏற்பட்டு 11பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்தியது.பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் சாலையை உயர்த்தியது என விபத்துக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.

இந்தநிலையில், ஸ்ரீங்கம் ரெங்கநாதர் கோவிலில் நாளை சித்திரை தேரோட்டம் நடைபெறுகிறது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இதையடுத்து தேரோடும் வீதிகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் சிவராசு மற்றும் மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர்,தேரோடும் பாதையில் மின் கம்பிகள் மற்றும் மரங்கள் உள்ளனவா என ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

அனைத்து துறையினரையும் ஒருங்கிணைத்து தேரோட்டத்தை நடத்த உள்ளதாகவும், சிறு அசம்பாவிதமும் ஏற்படா வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.  டிஜிபி மற்றும் உள்துறை செயலர் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக கூறிய ஆட்சியர் சிவராசு, பக்தர்கள் முகக்கவசம் அணிந்து விழாவில் பங்கேற்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.