உள்ளாட்சி தேர்தல்: திமுக-வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை திமுக வெளியிட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தல்:  திமுக-வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை திமுக வெளியிட்டுள்ளது.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இரண்டு கட்டங்களாக, அடுத்த மாதம் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, தேர்தல் நடைபெறும் மாவட்டங்களின் நிர்வாகிகளுடன் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேற்று மாலை ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த நிலையில் திமுகவின் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட உள்ளாட்சி அமைப்பிற்கு போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை, மாவட்ட செயலாளரும் அமைச்சருமான தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ளார். அதில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் மாவட்ட ஊராட்சி மற்றும் ஒன்றிய குழு வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.