ராமநாதபுரம் மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகள் இல்லை - மாவட்ட ஆட்சியர்

ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை வெள்ளத்தினால் பாதிப்புகள் ஏற்படவில்லை என மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் பேட்டி அளித்தார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகள் இல்லை - மாவட்ட ஆட்சியர்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்கு 800 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மதுரை, சிவகங்கை இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு 3000 கனஅடி நீர் மற்றும் வெள்ள நீர் 5000 கன அடி நீர் என மொத்தம், ராமநாதபுரம் வைகை ஆற்றில் 8000 கன அடி நீர் சென்று கொண்டிருக்கிறது. 

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வகீஸ், பார்த்திபனூர் மதகு அணையில் ஆய்வு செய்தார். வலது, இடது பிரதான கால்வாயில் செல்லும் தண்ணீரின் அளவு, எந்தெந்த கண்மாய்களுக்கு தண்ணீர் செல்கிறது என்பவை குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து பாரலையாறு கால்வாயில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட பங்கீடான 800  கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும் அணையின் கீழ் பகுதிகளில் பெய்யும் மழைநீர் அதிக அளவில் செல்வதால், பார்த்திபனூர் மதகு அணையில் இருந்து சுமார் 8 ஆயிரம் கன அடி தண்ணீர் செல்கிறது. இதில் வலது பிரதான கால்வாய்களில் கண்மாய்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் வெள்ளத்தினால் இதுவரை பாதிப்புகள் ஏற்படவில்லை. அனைத்து கண்மாய்களும் நிரம்பும் வகையில் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது என கூறியுள்ளார்.