இஸ்ரோ அறிவியாலளர்களுக்கு பாராட்டு தெரிவித்தார் பா.ம.க. நிறுவனர் இராமதாஸ்...!

இஸ்ரோ அறிவியாலளர்களுக்கு பாராட்டு தெரிவித்தார் பா.ம.க. நிறுவனர் இராமதாஸ்...!

நிலவில் உந்துசக்தி கருவியிலிருந்து சந்திரயானின் தரையிறங்கும் கருவி வெற்றிகரமாக பிரிந்ததால், இஸ்ரோ அறிவியலாளர்களுக்கு பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.


நிலவில் உந்துசக்தி கருவியிலிருந்து சந்திரயானின் தரையிறங்கும் கருவி வெற்றிகரமாக பிரிந்ததற்கு பாராட்டு தெரிவித்து பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஸ்ரீஹரிஹோட்டாவில் இருந்து ஜூலை 14-ஆம் நாள் விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 3 விண்கலத்தை நிலவில் தரையிறக்குவதற்கான விக்ரம் லேண்டர் கருவி, இன்று வெற்றிகரமாக அதை செலுத்தி வந்த உந்துசக்தி கருவியிலிருந்து பிரிக்கப்பட்டிருக்கிறது. மிகவும் நுணுக்கமான இந்த பணியை வெற்றிகரமாக சாதித்த இஸ்ரோ அறிவியலாளர்களுக்கு  பாராட்டுகளும், வாழ்த்துகளும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க : சந்திரயான் 3 - வெற்றிகரமாகப் பிரிந்தது லேண்டர்...!

சந்திரயான் 3  விண்கலம் திட்டமிட்டபடி வரும் 23-ஆம் நாள் நிலவில் இறங்கி ஆய்வை மேற்கொள்ளும்; இதுவரை கண்டறியப்படாத  நிலவு குறித்த உண்மைகளை உலகுக்கு சொல்லும் என்று உறுதியாக நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.