மழைநீர் வடிகால் அமைக்கும் பணி 95%  நிறைவு... மாநகராட்சி ஆணையாளர் பேட்டி...

சென்னையில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்து விட்டதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார்.

மழைநீர் வடிகால் அமைக்கும் பணி 95%  நிறைவு... மாநகராட்சி ஆணையாளர் பேட்டி...

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் சென்னையின் அனைத்து மண்டலங்களிலும் நடைபெறும் பருவ மழை எச்சரிக்கை நடவடிக்கைகள் சென்னை மாநகர ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு செய்து வருகிறார் அதன் தொடர்ச்சியாக இன்று திருவிக நகர் மண்டலத்துக்கு உட்பட்ட மூலக்கொத்தளம் கொடுங்கையூர் பேசின்பிரிட்ஜ் ஆகிய இடங்களில் மழைநீர் தேங்கும் இடங்களையும் அங்கு செய்யப்பட்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் ஆய்வு மேற்கொண்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர்வடிகால் அமைக்கும் பணியில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது அதன் தொடர்ச்சியாக 696 கிலோ மீட்டர் அளவிற்கு மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் மேற்கொள்ள தொடங்கி அதில் 95 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது.

இன்று மண்டலம் 6  உட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டோம். இந்த பகுதியில் பெரும்பாலான இடங்களில் பக்கிங்காம் கால்வாய் செல்கிறது பக்கிங்காம் கால்வாயை பொறுத்தவரையில் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டுக்குள் வருவதால் அவர்களும் கால்வாயில் உள்ள ஆகாய தாமரைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் தேங்கும் இடங்கள் மாறுபடும் புதிதாக உருவாகும் கட்டிடங்களால் இதுபோல ஒவ்வொரு மழைக் காலங்களிலும் தண்ணீர் தேங்கும் இடங்கள் மாறுபடும் வாய்ப்பு இருக்கிறது இதற்காக ஒவ்வொரு மண்டலத்திற்கும் பிரத்தியேகமாக ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து தன்னர் தேங்கும் இடங்களை கண்டறிந்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவிக்க உத்தரவிட்டுள்ளோம் என்றார்.

 மேலும் தேங்கும் மழைநீரை அப்புறப்படுத்த சென்னை மாநகராட்சியிடம் 507 ராட்சத மோட்டார்கள் கை வசம் இருப்பதாகவும்  கையிருப்பில் உள்ள மோட்டார்கள் சரியான நிலையில் இயங்குகிறதா என்பதை ஒவ்வொரு மண்டலத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் மட்டுமல்லாமல் மண்டலத் துணை ஆணையர்கள் அதனை ஆய்வு செய்து சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது என்றார்.

சென்னை மாநகராட்சியின் நோக்கம் என்பது எந்த குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் தேங்கி விடக்கூடாது என்பதுதான் அதற்கான பணிகளை தான் சென்னை மாநகராட்சி முன்னெடுத்து நடத்தி வருகிறது. மேலும் கடந்த காலங்களில் எந்தெந்த பகுதிகளில் மழைநீர் தேங்கி இருந்ததோ அந்த இடங்களில் இன்னும் 15லிருந்து 20 நாட்களில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் முடிக்கப்படும் என்றார்.