"எதிர்கட்சியாய இருந்தால் இரயில் மறியல்; ஆளும் கட்சியானால் கூட்டுப்பொறியல்" திமுக மீது சீமான் காட்டம்!

காவிரி நதிநீர் பிரச்சினையில் திமுக எதிர்கட்சியாக இருந்த போது ரயில் மறியலும், ஆளும் கட்சியாக உள்ள போது கூட்டு பொறியலாக உள்ளது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சாடியுள்ளார்.

கடலூர், திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு உரையாற்றினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பாராளுமன்ற மன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது என்றும் இதில் புதிய யுக்தியாக மற்ற கட்சிகள் 5 ஆயிரம் கொடுத்தால் நான் 50 ஆயிரம் தருவேன் என கிண்டலாக பதிலளித்தார். காவிரி நதிநீர் பிரச்சனை குறித்து பதிலளித்த சீமான், கன்னடர்கள் பாரத மாதாவின் பிள்ளைகள்  என்றால், நாங்கள் குப்பையில் இருந்து வந்தவர்களா? என்றும் கர்நாடகம் பக்கத்து மாநிலமா? அல்லது பகை நாடா? என சீமான் கேள்வி எழுப்பினார். அவர்கள் நீர்வளம் அவர்களுக்கு முக்கியம் என்றால், எங்கள் நில வளம் எங்களுக்கு முக்கியம் என்ற முடிவுக்கு வருவோம் என்றார்.

கருணாநிதிக்கும் திமுக அரசின் உரிமைத்தொகைக்கும் என்ன சம்மந்தம் உள்ளது என்று கேள்வி எழுப்பிய அவர், தவறான நிர்வாகம் நடக்க அதனை தேர்வு செய்த மக்களும் தான் காரணம் என்றார்.  

கற்றவர் தான் மற்றவர்களுக்கு வழிகாட்ட வேண்டும், படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்றார். அன்று இந்தி தெரியாது போடா என்றவர்கள், இன்று இந்தி தெரியுமா வேலை வாருங்கள் என அழைக்கின்றனர் என குற்றம் சாட்டினார். காவிரி நதிநீர் பிரச்சினையில் எதிர்கட்சியாக இருந்தபோது ரயில் மறியல் செய்த திமுக, ஆளும் கட்சியாக மாறிய நிலையில் தற்போது கூட்டு பொறியலாக உள்ளது என கடுமையாக விமர்சனம் செய்தார்.

இதையும் படிக்க: குன்னூர் விபத்து பிரதமர் குடியரசுத் தலைவர் இரங்கல்!