ஒவ்வொருவாட்டியும் பொய் சொல்லியே ஆட்சிக்கு வராங்க.. Angrybird ஆக மாறும் ஆர்.பி உதயகுமார்

திமுக தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் டீசல் விலையை குறைப்போம் என்று கூறி தற்போது ஆட்சிக்கு வந்தவுடன் மழுப்பலான காரணத்தை கூறுவது  மக்கள் மீது அக்கறை இல்லாததை  காட்டுகிறது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்  குற்றச்சாட்டியுள்ளார்.

ஒவ்வொருவாட்டியும் பொய் சொல்லியே ஆட்சிக்கு வராங்க.. Angrybird ஆக மாறும் ஆர்.பி உதயகுமார்

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் பயிற்சி கூட்டம் டி.குன்னத்தூரில் அம்மா கோயிலில்  நடைபெற்றது.இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்டு பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார்,கடந்த சட்டமன்ற தேர்தலில்  99 படிகளை ஏறி விட்டோம் 100வதுபடியில்  தான்  வெற்றி வாய்ப்பை இழந்து உள்ளோம் என கூறினார்.

 அதிமுகவிற்கும் திமுகவிற்கும் வெறும் 2 லட்சம் ஓட்டு தான் வித்தியாசம் என்றும் ஆனால் நமக்கும் திமுகவிற்கும் 3 சதவீதம் என்று கூறுவார்கள் மூன்று சதவீதம் என்பது சில இடங்களில் கூடுதல் வாக்குகள் திமுகவிற்கு கிடைத்ததை  ஒப்பிட்டு கூறியுள்ளனர் என்றார்.

 நீட் தேர்வை காங்கிரஸ் கொண்டு வந்த போது அதற்கு வாய்மூடி மவுனமாக இருந்து திமுக தான் என்றும், எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தபோது ‌நீட் வரக்கூடாது என்று சட்டப்பேரவையில் மசோதாவை நிறைவேற்றி அதை குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பிவைத்தார்.தொடர்ந்து பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்து உச்சநீதிமன்றம் வரை எடப்பாடி பழனிசாமி கடுமையாக போராடியதாக ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

 நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறியவர்கள் தற்போது நீட் தேர்வு உள்ளதா இருக்கிறதா என்பதை  தற்போது வரை சொல்லவில்லை என கேள்வி எழுப்பி உள்ளார்.கடந்த சட்டமன்றத் தேர்தலில்  பெட்ரோல் டீசல் விலையை குறைப்போம் என்று கூறினார்கள் ஆனால் இன்றைக்கு மதுரை உட்பட 31 மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டிவிட்டியுள்ளது இதனால் அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்ந்துள்ளதாக கூறினார்.

ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் அனைத்து பிரச்சினைகளையும் தீர்வு காண்போம் என்று நாங்கள் சொன்னதை செய்யக்கூடியவர்கள் என்று கூறிய ஸ்டாலின் தற்போது 50 நாட்கள் ஆகியும் பிரச்சனையை தீர்க்காமல்  இருப்பதாக பேசினார்.நிகழ்ச்சியில் தொடர்ந்து பேசிய உதயகுமார் தேர்தல் அறிக்கையின் நீங்கள் கூறியுள்ளபடி பெட்ரோல்,டீசல் விலை குறையுங்கள் என்றுதான் கூறி வருகிறோம் ஆனால் தற்போது நழுவ காரணம் என்ன  என கேள்வி எழுப்பினார்.

 நீட் தேர்வில் மழுப்பலான பதிலைக் கூறுகிறார்கள் தேர்தலுக்கு முன்பு இதை கூறவில்லை  இதன் மூலம் மக்கள் மீது அக்கறை இல்லாதைதான் காட்டுகிறது என முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் பேசினார்.

 அதேபோல் மின்சாரத்துறையில் அனுபவம் வாய்ந்த சில பேர் அமைச்சராக பணியாற்றி உள்ளனர் ஆனால் யாரும் அணில் மீது பழி சுமத்தவில்லை‌ நாம் அனில் அம்பானியை பற்றி கேள்வி பட்டுருப்போம் ஆனால் மின்சாரத்துறை அமைச்சர் மின்வெட்டுக்கு அணில் தான் என்று கூறுகிறார். அவர் கூறியது மிகவும் விந்தையாக இருக்கிறது கடந்த கால திமுக ஆட்சியில் கடுமையாக மின்வெட்டு இருந்தது இதை அப்போது அமைச்சராக இருந்த ஆற்காடு வீராசாமி ஒப்புதல் வாக்குமூலமே கொடுத்துள்ளார் என்று பேசினார்.