இந்து முண்ணனி இயக்கத்தை கண்டித்து கண்டன ஆா்ப்பாட்டம்....!

மதுரையில் இந்து முண்ணனி சார்பில் ஷேர்ஆட்டோ சங்க பலகை வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது.

இந்து முண்ணனி இயக்கத்தை கண்டித்து கண்டன ஆா்ப்பாட்டம்....!

மீனாம்பாள்புரம் பகுதியில் இந்து முண்ணனியினரின் இந்து ஆட்டோ தொழிலாளர் முண்ணனி சங்கம் சார்பில் ஷேர் ஆட்டோ நிலையம் பலகை திறப்பு விழா நடைபெற்றது.

இந்நிலையில் இந்து முண்ணனியினர் அனுமதியின்றி பலகை வைத்துள்ளதாக கூறி அதற்கு திமுக, கம்யூனிஸ்ட் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சில நாட்களுக்கு முன்பாக அனுமதி பெறவில்லை என கூறி முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை, காவல்துறை அகற்றினர். அதேபோல அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருக்கும் இந்து முண்ணனியினரின் ஆட்டோ நிலைய பலகையை அகற்றாவிட்டால் கருணாநிதி சிலையை மீண்டும் அந்த இடத்தில் வைக்கப்போவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர்.