கோவை-சீரடி இடையே தனியார் ரயில் சேவை இன்று முதல் தொடக்கம்

கோவை-சீரடி இடையே இயக்கப்படும் தனியார் ரயில் சேவை இன்று முதல் தொடங்குகிறது.

கோவை-சீரடி இடையே  தனியார் ரயில் சேவை இன்று முதல் தொடக்கம்

இந்தியாவிலேயே முதல் முறையாக தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு, கோவையில் இருந்து சீரடிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில், கோவையில் இருந்து முதல் பயணத்தை இன்று தொடங்க உள்ளது.

வாரம் ஒரு முறை செல்லும் இந்த ரயிலில் டிக்கெட் முதல் பராமரிப்பு பணிகள் வரை தனியார் நிறுவனமே மேற்கொள்ள உள்ளது.

பிரதமர் மோடியின் பாரத் கவுரவ் திட்டத்தின் கீழ் தனியார் வசம் கொடுக்கப்பட்டுள்ள ரயிலில் உள்கட்டமைப்பு வடிவங்களை தனியார் நிறுவனமே மேற்கொண்டுள்ளது.

தனியார் வசம் கொடுக்கப்படும் ரயிலில் பயணிகளுக்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், உணவு வசதிகள் மற்றும் பயணிகளுக்கு வழங்கப்படும் படுக்கை, போர்வை உள்ளிட்டவற்றை ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ரயில்வே துறை சேவைகளை தனியார் வசம் ஒப்படைக்க எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், இன்று முதல் தனியார் ரயில் சேவை கோவையில் இருந்து தொடங்குவது குறிப்பிடத்தக்கது.