தரமற்ற பேருந்துகள்.. அதிக விபத்துக்கள் ஏற்படுவதாக மக்கள் குற்றச்சாட்டு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் இயக்கப்படும் தரமற்ற பேருந்துகளால் அதிக விபத்துகள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தரமற்ற பேருந்துகள்.. அதிக விபத்துக்கள் ஏற்படுவதாக மக்கள் குற்றச்சாட்டு!
திருநெல்வேலி போக்குவரத்து கோட்டத்திற்கு உட்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் 12 பணிமனைகள் செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மாவட்டத்தில் இயக்கப்படும் பேருந்துகளில் பெரும்பாலானவை பழுந்தடைந்த நிலையில் உள்ளதால் விபத்துக்கள் அடிக்கடி ஏற்படும் வண்ணம் இருக்கிறது.மேலும் நாகர்கோவிலில் இயக்கப்படும் தரமற்ற பேருந்துகள் குறித்து அவ்வபோது, சமூக வலைதளங்களில் பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இருந்தபோதிலும், இது தொடர்பாக போக்குவரத்து துறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் பிற மாவட்டங்களில் சேதமடைந்த பேருந்துகளை கன்னியாகுமரி மாவட்டத்தில் இயக்கப்படுவதாக குற்றம் சாட்டும் பொதுமக்கள், இது குறித்து உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.