அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய இளைஞர்...கூட்டத்திலிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு...!

அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய இளைஞர்...கூட்டத்திலிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு...!

கிராமசபை கூட்டத்தில் கனிமவள கொள்ளை குறித்து அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய இளைஞரை போலீசை வைத்து வெளியேற்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டம் அருவிக்கரை ஊராட்சியில் மே தினத்தையொட்டி கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில்  தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டனர். 

அப்போது நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சீலன் என்பவர் கேரளாவிற்கு கனிமவளங்கள் அதிகளவில் கடத்தப்படுவது குறித்தும், குவாரிகளுக்கு அனுமதி வழங்குவது குறித்தும் கேள்வி எழுப்பினர். இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் மனோதங்கராஜ், இளைஞரிடம் ஆவேசமாக பேசியுள்ளார்.

இதையும் படிக்க : காங்கிரஸ் வெளியிட்டுள்ள தேர்தல் வாக்குறுதிகள் என்னென்ன...?

நீ தான் கல்குவாரி நடத்துபவர்களிடம் கமிஷன் வாங்கி கொண்டு தடுக்கிறாய் எனவும், அருவிகரை கிராமசபா கூட்டத்தில் பேசுவதற்கு நீ யார் எனவும், ஊராட்சியில் உள்ளவர்கள் மட்டுமே கேள்வி கேட்க வேண்டும் எனவும் ஆவேசமாக பேசியுள்ளார். தொடர்ந்து போலீசார் உதவியுடன் கேள்வி கேட்ட இளைஞரை அக்கூட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். 

இதனால் கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. இருப்பினும், கிராம சபா கூட்டத்தில் தமக்காக கேள்வி கேட்டதற்காக இளைஞர் வெளியேற்ற பட்டதால் பெண்கள், மூதாட்டிகள்  சிலர் கூட்டத்தை விட்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.