அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க ஏற்பாடு...! துணைவேந்தர் வேல்ராஜ் அறிவிப்பு..!! 

அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க ஏற்பாடு...! துணைவேந்தர் வேல்ராஜ் அறிவிப்பு..!! 

அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஏற்படுத்தப்படும் என பல்கலைக்கழக துணை வேந்தா் வேல்ராஜ் தொிவித்துள்ளாா். 

சென்னை டி.டி.கே சாலையில் உள்ள மியூசிக் அகாடமியில் முதல் மொழி வழங்கும் நாளைய தமிழா என்ற இணைய வழி தமிழ் மாநாடு துவக்கவிழா நடைபெற்றது. இதில் அண்ணா பல்கலை துணைவேந்தர் வேல்ராஜ் பங்கேற்று உரையாற்றினார். 

அப்போது உலகத்தின் முதல் மொழி தமிழ் மொழி தான் என்றும், தமிழின் பெருமையை முதலில் தமிழர்கள் அறிய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்ட வேல்ராஜ் , தமிழ் மொழியின் பெருமையை பிரதமர் அறிந்திருக்கிறார் என்றும் , அதன் காரணமாகவே தமிழ் மொழியின் பெருமைகளை அவர் தொடர்ந்து பேசி வருவதாகவும் தெரிவித்தார். 


மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த வேல்ராஜ் , தமிழர் மரபு, தமிழும் தொழில்நுட்பமும் என்ற இரு பாடங்களை பொறியியல் மாணவர்களுக்கு அறிமுகம் செய்துள்ளதாகவும், ஆங்கிலத்திலும் தமிழிலும் அவை இருக்கின்றன என்றும் தெரிவித்தார். 

தொடர்ந்து, தமிழரின் பெருமையை மாணவர்கள் பொறியியல் படிப்பவர்கள் அறிய வேண்டும் என்றும், அண்ணா பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ஒலிம்பிக் பதக்கம் பெற நடவடிக்கை...! உதயநிதி ஸ்டாலின் பேட்டி...!!