விருதுநகரில் 2ம் கட்ட அகழாய்வு ; தொன்மையான பொருட்கள் கண்டுபிடிப்பு...!

விருதுநகரில் 2ம் கட்ட அகழாய்வு ; தொன்மையான பொருட்கள் கண்டுபிடிப்பு...!

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 2-ஆம் கட்ட அகழாய்வுப் பணியில் 200-க்கும் மேற்பட்ட தொன்மையான பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. 

சாத்தூர் வைப்பாற்றின் வடக்கு கரையோரத்தில் அமைந்துள்ள விஜய கரிசல் குளத்தில் 35 ஆண்டுகளுக்கு முன்பு தொல்லியல் சான்றுகள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், இதன் தொடர்ச்சியாக, வெம்பக் கோட்டையில் முதல்கட்ட அகழாய்வு பணி கடந்த ஆண்டு மார்ச் 16-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 30-ம் தேதி வரை நடைபெற்றது. இதில், சுடு மண்ணால் ஆன பகடைக்காய், ஆட்டக்காய்கள், முத்து மணி, தங்க அணிகலன் என சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழமையான பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.  

இதையும் படிக்க : அண்ணாமலை ஊழல் பட்டியலை தனிப்பட்ட முறையில் வெளியிட்டாரா? பாஜக கட்சி தலைவராக வெளியிட்டாரா?

இதன் 2-ம் கட்ட அகழாய்வுப் பணி, கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில், தற்போது வரை சுடு மண்ணால் ஆன புகைபிடிப்பான், கல்லால் ஆன எடைக்கல், செப்பு நாணயங்கள், கண்ணாடி மணிகள், சுடுமண் காதணி என 200-க்கும் மேற்பட்ட தொன்மையான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றனர்.