அண்ணாமலை ஊழல் பட்டியலை தனிப்பட்ட முறையில் வெளியிட்டாரா? பாஜக கட்சி தலைவராக வெளியிட்டாரா?

அண்ணாமலை ஊழல் பட்டியலை தனிப்பட்ட முறையில் வெளியிட்டாரா? பாஜக கட்சி தலைவராக வெளியிட்டாரா?

நாட்டிலேயே ஊழலை ஒழிக்க பிறந்தவர் போல் அண்ணாமலை நடந்து கொள்வதாக அதிமுக துணை பொது செயலாளர் கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார். 


கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்.

இதையும் படிக்க : ராகுலின் பதவி நீக்கத்தை கண்டித்து...காங்கிரஸார் ரயில் மறியல் போராட்டம்...!

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், அண்ணாமலை ஊழல் பட்டியல் வெளியிட்டது குறித்து கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், அண்ணாமலை தனிப்பட்ட முறையில் ஊழல் பட்டியல் வெளியிட்டாரா அல்லது பாஜக கட்சி தலைவர் என்கிற முறையில் வெளியிட்டாரா என்பதை தெரிவித்தால் அதற்கு ஏற்றவாறு அதிமுகவின் பதில் இருக்கும் என கே.பி. முனுசாமி கூறியுள்ளார். 

தொடர்ந்து பேசிய அவர், ஊழலை எதிர்த்து ஜூன் மாதம் பாஜக தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை நடத்த இருப்பது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த கே.பி. முனுசாமி, உலகிலேயே இவர் தான் ஏதோ நாட்டுக்காகவே உழைக்க பிறந்தவர் போல் நடந்து கொள்வதாகவும், இந்த நாட்டுக்காக உழைத்த தலைவர்கள், அரசியல்வாதிகள், மக்கள் என அதிக பேர் இருக்கின்றனர். அதேபோல் கட்சி ரீதியாகவும் சமூக ரீதியாகவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். ஆகவே, அவருடைய பாதயாத்திரை குறித்து கருத்து கூற ஒன்றும் இல்லை என தெரிவித்தார்.