சென்னையில் தொடர்ந்து ஒரே விலையில் நீடிக்கும் பெட்ரோல், டீசல் விலை.. என்ன காரணம்??

சென்னையில் ஒரே விலையில் தொடரும் பெட்ரோல் மாற்றும் டீசல் விலை

சென்னையில் தொடர்ந்து ஒரே விலையில் நீடிக்கும் பெட்ரோல், டீசல் விலை.. என்ன காரணம்??

சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப எரிபொருள் விலையை தினசரி நிர்ணயம் செய்யும் நடைமுறைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. 

இதையடுத்து கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக ஒரு லிட்டர் பெட்ரோல் 101.40 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில், சென்னையில் இன்றும் ஒரு லிட்டர் பெட்ரோல் 101.40 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து ஒரே நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நீடிப்பதால் வாகன ஓட்டிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.