நாட்டில் மக்கள் வாழ்வதற்கு அதிக விலை கொடுக்க வேண்டும் ...பிரியங்கா காந்தி ட்வீட் ..!

நாட்டில் மக்கள் வாழ்வதற்கு அதிக விலை கொடுக்க வேண்டும் என்ற நிலை இந்தியாவில் ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சனம் செய்துள்ளார். 

நாட்டில் மக்கள் வாழ்வதற்கு அதிக விலை கொடுக்க வேண்டும் ...பிரியங்கா காந்தி ட்வீட் ..!

உத்திரபிரதேசம் மாநிலத்தின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தி தேர்தலுக்கான நடவடிக்கைகளையும் ஆளும் பாரதிய ஜனதா அரசின் தோல்வியான திட்டங்கள் குறித்தும் அவ்வப்போது டுவிட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார்.

அதனடிப்படையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சிக்கு பிறகு இந்தியாவில் விலைவாசி உயர்ந்து விட்டதாகவும், இப்போது இருக்கக்கூடிய சூழலில் விலை ஏற்றம் இல்லாத ஒரு பொருள் என்பதை யாராலும் சுட்டிக்காட்ட முடியாது என தெரிவித்துள்ளார்.

மேலும் கோதுமை, துணிகள், காலணிகள், பருப்பு வகைகள், காப்பீடு இன்சூரன்ஸ், மொபைல் டேட்டா என அனைத்திலும் விலையேற்றம் கண்டுள்ள நாட்டில் "மக்கள் வாழ்வதற்கே அதிக விலை கொடுத்து தான் ஆக வேண்டும்" என்ற ஒரு சூழல் ஏற்பட்டுள்ளதாக பதிவிட்டுள்ளார். அதே நேரத்தில் விலைவாசி உயர்வு என்ற கோஷங்களை எழுப்பும் மக்கள் பணவீக்கத்தை சந்தித்து வருவதாக கருத்து தெரிவித்துள்ளார்.