தூத்துக்குடியில் கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழப்பு...அச்சத்தில் மக்கள்!

தூத்துக்குடியில் கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழப்பு...அச்சத்தில் மக்கள்!

தூத்துக்குடியில் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலக நாடுகளையே அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் சமீப காலமாக குறைந்து காணப்பட்ட நிலையில், மீண்டும் அதிவேகம் எடுத்து பரவி வருகிறது. நாளுக்கு நாள் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், உயிரிழப்புகளும் நிகழ்ந்து வருகிறது. இதன் எதிரொலியாக தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, காரைக்காலில் கொரோனா தொற்று காரணமாக ஒருவர் உயிரிழந்த நிலையில், அங்கு முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததன் எதிரொலி...காரைக்காலில் மாஸ்க் அணிவது கட்டாயம்!

இந்நிலையில் கொரோனா பரவலுக்கு அடுத்தடுத்து உயிரிழப்புகள் நிகழ்ந்து வரும் நிலையில், தற்போது தூத்துக்குடியில் கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழந்துள்ளது மேலும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.  தூத்துக்குடி மாவட்டம் பாத்திமா நகர் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர், கடந்த மாதம் 23-ம் தேதி கொரோனா நோய் தொற்றால் பாதிப்படைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து, மருத்துவமனையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நோயாளிகளுக்கும், பொதுமக்களுக்கும் முகக்கவசங்கள் வழங்கப்பட்டு, முகக்கவசம் அணிய வேண்டியதன் அவசியம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. மேலும், மருத்துவமனை வளாகத்தில் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பான விழிப்புணர்வு போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளன. இருப்பினும், தூத்துக்குடியில் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.