வேளாண் மண்டலத்தில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதா? - சீமான்

வேளாண் மண்டலத்தில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதா? - சீமான்
Published on
Updated on
1 min read

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க விடமாட்டோம் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.


பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் உள்ள 11 இடங்களை துளையிட்டு நிலக்கரி சுரங்கம் அமைக்க மத்திய அரசு தேர்வு செய்ததாக தகவல் வெளியானது. ஆனால், இதற்கு அனுமதி தரப்படாது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தஞ்சாவூர் நிலக்கரி சுரங்கம் தொடர்பாக சென்னை போரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சீமான், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி சுரங்கம் அமைக்க தாங்கள் விடமாட்டோம் எனவும், இயற்கை ஆதாரங்களான சூரிய ஒளி, காற்றாலை, கடல் அலை மூலம் மின் உற்பத்தியை பெருக்க அரசு முன் வர வேண்டும் எனவும் வலியுத்தினார். 

மேலும் கலாஷேத்ரா கல்லூரி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டுமென தெரிவித்த சீமான், எல்லா பிரச்சினைகளுக்கும் குழு மட்டுமே அமைக்கப்படுவதே தவிர நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என குற்றம்சாட்டினார். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com