கள்ளகுறிச்சி மாணவியின் உடல் நல்லடக்கம் செய்ய ஏற்பாடு.. மருத்துவமனை முன்பு போலீசார் குவிப்பு!!

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  கள்ளகுறிச்சி மருத்துவமனை முன்பு இரண்டு வஜ்ரா வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் வடக்கு மண்டல ஐஜி சந்தோஷ் குமார் தலைமையில் சுமார் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கள்ளகுறிச்சி மாணவியின் உடல் நல்லடக்கம் செய்ய ஏற்பாடு.. மருத்துவமனை முன்பு போலீசார் குவிப்பு!!

கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரம்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பயின்ற மாணவி ஸ்ரீமதி கடந்த 13 ஆம் தேதி மர்மமான முறையில் மரணமடைந்தார். மாணவி உயிரிழந்த விவகாரம் பெரும் கலவரமாக மாறியது.

மருத்துவமனை முன்பு போலீஸ் குவிப்பு:

மேலும், மாணவியின் உடல் நீதிமன்ற உத்தரவுப்படி மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டது. எனினும் உடலை வாங்க பெற்றோர் வராததால் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பெற்றோரின் கோரிக்கையை  நீதிமன்றம் நிராகரித்த நிலையில் மாணவியின் உடல் நல்லடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால்  மருத்துவமனை முன்பு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனை வளாகம் முழுவதும் சுமார் 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வஜ்ரா வாகனங்கள்:

மேலும் எந்த ஒரு அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனை முன்பு இரண்டு வஜ்ரா வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.