தற்காலிக கடைகள் : பழனி நகராட்சிக்கு உத்தரவிட முடியாது...நீதிமன்றம் தீர்ப்பு!

தற்காலிக கடைகள் : பழனி நகராட்சிக்கு உத்தரவிட முடியாது...நீதிமன்றம் தீர்ப்பு!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தற்காலிக கடைகள் ஒதுக்கீடு செய்வது குறித்த நகராட்சி ஆணையரின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. 

பழனி காந்தி மார்க்கெட்டில் மறுகட்டமைப்பு பணிகள் முடியும் வரை தற்காலிக கடைகள் அமைத்து தருவதாக நகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடை உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கு, நீதிபதி சுப்பிரமணியன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 

இதையும் படிக்க : பிற மாநிலங்களிலிருந்து கடன் வாங்கியாவது இலவச அரிசி வாக்குறுதியை நிறைவேற்றுவோம் - டி.கே.சிவக்குமார்!

அப்போது, தற்காலிக கடைகள் அமைத்து தருவது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. மனுதாரர்கள் விரும்பினால் அந்த தற்காலிக கடைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். இல்லையெனில் அவர்களது விருப்பத்தின் பேரில் வேறு இடங்களுக்கு செல்லலாம். 

ஆனால்,குறிப்பிட்ட இடத்தில்தான் தற்காலிக கடைகள் அமைக்க வேண்டும் என நகராட்சிக்கு உத்தரவிட முடியாது. ஆகவே நகராட்சி வழங்கும் மாற்றிடத்தை மனுதாரர்கள் ஏற்றுக்கொள்ளலாம். இல்லையெனில் நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கலாம் எனக்கூறி வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.