2வது நாளாக பள்ளி முதல்வரிடம் விசாரணை... வாட்ஸ் ஆப் குழுவில், பள்ளி ஆசிரியர்கள் பேசியது என்ன?

2வது நாளாக பள்ளி முதல்வரிடம் விசாரணை... வாட்ஸ் ஆப் குழுவில், பள்ளி ஆசிரியர்கள் பேசியது என்ன?

ஆசிரியர் ராஜகோபாலன் மீதான பாலியல் புகார் வழக்கில் சென்னை பிஎஸ்பிபி பள்ளி முதல்வர் கீதாகோவிந்தராஜன் அசோக்நகர் மகளிர் காவல் நிலையத்தில் இரண்டாவது நாளாக இன்றும் ஆஜரானார்.

பத்ம சேஷாத்ரி பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவருக்கு ஆசிரியர் ராஜகோபால் பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், இதுதொடர்பான விசாரணைக்காக,  பத்ம சேஷாத்ரி பள்ளி முதல்வர் கீதா கோவிந்தராஜன் மற்றும் இயக்குனர் ஷீலா ராஜேந்திரன் ஆகிய இருவரும் அசோக் நகர் காவல் நிலையத்தில் நேற்று ஆஜராகினர்.

சுமார் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக இருவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், போலீசாரின் உத்தரவின்பேரில், சென்னை அசோக்நகர் மகளிர் காவல்நிலையத்தில், பள்ளி முதல்வர் கீதா கோவிந்தராஜன், இரண்டாவது நாளாக இன்றும் நேரில் ஆஜராகியுள்ளார். அவரிடம் ஆசிரியரின் அத்துமீறல் தொடர்பாக பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு விளக்கங்கள் பெறப்பட்டு வருகின்றன.

பாலியல் புகாரை மறைக்க பள்ளி நிர்வாகத்தினர் தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டதா?, வாட்ஸ் ஆப் குழுவில், பள்ளி ஆசிரியர்கள் பேசிக் கொண்டது என்ன? போன்ற பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.