இரு பிரிவினருக்கு இடையேயான தகராறு!!! 7 பேர் கைது!!!

கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு அருகே ஊரணி பொங்கல் விழாவின் போது பாடல் இசைக்கப்பட்டதாக இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் 7 பேர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரு பிரிவினருக்கு இடையேயான தகராறு!!! 7 பேர் கைது!!!

கடலூர் அருகே நடுவீரப்பட்டு அடுத்த குமளங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அய்யனார் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சஞ்சீவிராயன் கோவில் கிராமத்து மக்கள் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக ஊரணி பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். அதன்படி சஞ்சீவிராயன்கோவில் ஊர்மக்கள் நடுவீரப்பட்டு வழியாக ஊர்வலமாக அய்யானார் கோவிலுக்கு சென்று ஊரணிபொங்கல் வைத்து வழிபட்டனர்.

பின்னர் ஊர்வலமாக மீண்டும் நடுவீரப்பட்டு காலனி வழியாக சஞ்சீவிராயன் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தபோது, ஒரு குறிப்பிட்ட பாடலை ஒலிபெருக்கில் போட்டுக்கொண்டு ஊர்வலத்தில் சென்ற சிலர் நடனமாடியபடி சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த சிலர்,3 இளைஞர்களிடம் ஏன் எங்கள் பகுதியில் பாடல் போட்டுக்கொண்டு நடனமாடி செல்கிறீர்கள் என்று கேட்டதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | பட்டப்பகலில் கடை புகுந்து கொள்ளை!!! பதற வைத்த சம்பவம்!!!

அப்போது அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியுள்ளது.தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் காவல் ஆய்வாளர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அனைவரையும் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.இந்த மோதலில் சண்முகம், சிபிராஜ் மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் காயமடைந்து கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் படிக்க | குட்டியானையில் கடத்தப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல்!!!

மேலும் இவ்வழக்கு தொடர்பாக சஞ்சீவிராயன் கோவில் தெருவை சேர்ந்த  ரவிக்குமார்,சூரியா,திருமூர்த்தி,விஷ்ணு,எழில்செல்வன்,சந்துரு மற்றும் விக்னேஷ் ஆகிய 7 பேர் மீது நடுவீரப்பட்டு போலிஸார் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.மேலும் இது தொடர்பாக அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க டிஎஸ்பி சபியுல்லா தலைமையில் போலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க | இரண்டரை லட்சம் மதிப்புள்ள கள்ளச்சாராயம் பறிமுதல்!!!