மக்களவை தேர்தல்: தமிழ்நாடு காங்கிரஸ் உடன் கட்சி மேலிடம் ஆலோசனை!

மக்களவை தேர்தல்: தமிழ்நாடு காங்கிரஸ் உடன் கட்சி மேலிடம் ஆலோசனை!

மக்களவைத் தேர்தல் தொடர்பாக ஆகஸ்ட் 4ம் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களுடன் டெல்லியில் கட்சி மேலிடம் முக்கிய ஆலோசனை நடத்துகிறது. 

மக்களவைத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்வது தொடர்பாக மாநில வாரியாக காங்கிரஸ் மேலிடம் ஆலோசனை நடத்தி வருகிறது. 

இதையும் படிக்க : சைக்கிள் ஓட்டி வந்த 50 பேருக்கு இலவச தக்காளி!விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடந்த சுவாரஸ்யம்!

இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே. எஸ்.அழகிரி மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர், வரும் ஆகஸ்ட் 4ம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளனர். 

இந்த ஆலோசனை கூட்டத்தில், மாநிலத்தின் தொகுதிப் பங்கீடு, கூட்டணி முடிவுகள், தொகுதிவாரியாக நிர்வாகிகள் நியமனம் உள்ளிட்டவை தொடர்பாக  பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.