புதிய தலைமைச்செயலகமாக மாறும் ஓமந்தூரார் மருத்துவமனை?

ஓமந்தூரார் மருத்துவமனையில் புதிய தலைமைச்செயலக கட்டிடம் என்ற கல்வெட்டு  மீண்டும் பதிக்கப்பட்டுள்ளது.

புதிய தலைமைச்செயலகமாக மாறும் ஓமந்தூரார் மருத்துவமனை?

ஓமந்தூரார் மருத்துவமனையில் புதிய தலைமைச்செயலக கட்டிடம் என்ற கல்வெட்டு  மீண்டும் பதிக்கப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச்செயலகம் கட்டுவதற்கு தேர்வுசெய்யப்பட்டு,  2008-ஆண்டு ஜூன் மாதம் அப்போதைய  முதலமைச்சர் மு. கருணாநிதி அடிக்கல் நாட்டினார். இரண்டு ஆண்டுகளில் கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டு 2010-ம் ஆண்டு  மார்ச் 13-ம் தேதியன்று அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் இந்த கட்டிட வளாகத்தை திறந்து வைத்தார். இதையடுத்து புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்த அலுவலகங்கள் படிப்படியாக புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட்டும் வந்தது.

இந்த நிலையில், 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்ததும், புதிய கட்டடம் அரசு இயங்குவதற்கு ஏதுவாக இல்லை என கூறி,  அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்கே தலைமைச் செயலகத்தை மாற்றினார். அப்போது இங்கு கருணாநிதி ஆட்சியில் பதிக்கப்பட்ட  கல்வெட்டு அங்கிருந்து அகற்றப்பட்டது. பின்னர் இந்த வளாகம் பன்னோக்கு மருத்துவமனையாக உருவானது.இப்போது மீண்டும் திமுக ஆட்சி ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ளது. இதனால் பன்னோக்கு மருத்துவமனை கிண்டிக்கு மாற்றப்பட்டு இதே வாளாகம் தலைமை செயலகமாக மாற்றப்பட உள்ளது என தகவல்கள் வெளியாகின. தற்போது இதனை உறுதி படுத்தும் விதமாக ஜெயலலிதா ஆட்சியில் பெயர்த்து எடுக்கப்பட்ட  கல்வெட்டு மீண்டும் பதிக்கப்பட்டுள்ளது.