செப்டம்பர் -11ல் செவிலியர்கள் போராட்டம்!

செப்டம்பர் -11ல் செவிலியர்கள் போராட்டம்!

செப்டம்பர் 11 தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த போவதாக, செவிலியர்கள் தெரிவித்துள்ளனர். 

கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்கள், சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய உதயகுமார், 6000 செவிலியர்களை அதிமுக அரசு தற்காலிகமாக பணியமர்த்தியது. ஆட்சி மாற்றத்திற்கு பிறகு கொரோனா காலத்தில் பணியாற்றிய தற்காலிக 3000 செவிலியர்களை பணி நிரந்தர படுத்தினர்.  மீதமுள்ள 3000 செவிலியர்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், ஆறு மாதம் ஊதியம் நிலுவையுடன் இட ஒதுக்கீட்டை காரணம் காட்டி பணி நீக்கம் செய்யபட்டனர்.

இதனை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், அவர்களுக்கு அரசு செவிலியற்பணி, வழங்க வேண்டும் என்று நீதி மன்றம் ஆணை பிறப்பித்தது. ஆனால், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை, என்று அவர்கள் குற்றம் சாட்டினர்.

மேலும், நீட் தேர்வுக்கு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பல்வேறு போரட்டங்கள் நடத்தினார். ஆனால் பல உயிர்களை பாதுகாத்த எங்களுக்கு, திமுக அரசு ஏன் கவலை கொள்ள வில்லை? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும், இட ஒதுக்கீட்டை பின்பற்றி இருந்தால் அவர்களுக்கு, பணி நிரந்தர படுத்துவோம் என்று அமைச்சர் சொல்லியும் இது வரை நிரை வேற்ற வில்லை என்று குற்றம் சாட்டினர். எனவே தமிழக முதலமைச்சர் இதில் தலையிட்டு, இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி செவிலியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், அரசு கவனம் ஈர்க்கும் வகையில் செப்டம்பர் 11 ஆம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.