புதிதாக தொடங்கப்படும் சித்த மருத்துவ பல்கலை. வேந்தராக முதலமைச்சர் இருப்பார்- சட்ட மசோதா பேரவையில் தாக்கல்!!

முதலமைச்சரை வேந்தராக கொண்டு தமிழகத்தில் புதிதாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்குவதற்கான சட்ட மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

புதிதாக தொடங்கப்படும் சித்த மருத்துவ பல்கலை. வேந்தராக முதலமைச்சர் இருப்பார்- சட்ட மசோதா பேரவையில் தாக்கல்!!

தமிழகத்தில் சித்த மருத்துவம், ஆயுர்வேதா, ஹோமியோபதி மற்றும் இயற்கை மருத்துவம் ஆகிய துறைகளுக்கென தனி பல்கலைகழகம் நிறுவுவது தொடர்பான சட்டமுன்வடிவை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார்.

சென்னைக்கு அருகே இந்த பல்கலைக்கழகத்தை தொடங்க அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், புதிதாக தொடங்கப்படும் இந்த சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதலமைச்சர் இருப்பார் என மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழா அனைத்திற்கும் முதலமைச்சர் தலைமை வகித்து பட்டங்கள் பட்டயங்கள் அல்லது பிற கல்வி சிறப்பு சட்டங்கள் அனைத்தையும் வழங்குவார் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் சித்த மருத்துவக் கல்லூரிகள், யுனானி யோகா மற்றும் இயற்கை மருத்துவம், ஹோமியோபதி மருத்துவ கல்லூரிகள் அனைத்தும் புதிய பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.