" கள் தடை நியாயமானது என நிரூப்பித்தால் ரூ10 கோடி பரிசு" நல்லசாமி பேச்சு!!

கள் இறக்கி சந்தைப்படுத்த கோரி உரிமை மீட்பு அறப்போர் ஜனவரி மாதம் 21ம் தேதி தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் என தமிழ்நாடு கள் இயக்கம் கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி நாகையில் பேட்டியளித்துள்ளார்.

அப்பொழுது பேசிய அவர், "அருகில் உள்ள புதுச்சேரி, கர்நாடகா போன்ற மாநிலங்களில் தடை இல்லை. அங்கும் கலப்படம் செய்வார்கள். ஆனால் அந்த மாநில அரசுகள் கலப்படத்தை கட்டுப்படுத்தும் போது தமிழ்நாடு அரசால் ஏன் கலப்படத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. அப்படி என்றால் தமிழ்நாடு அரசு ஆளுமை இல்லாத அரசா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் பேசிய அவர், "ஒரு மரத்தில் இருந்து இறக்கப்படும் கள் தொடர்ந்து ஒரு மண்டலம் அதாவது 18 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பல நோய்கள் குணமாகும். எனவே கள்ளை உணவாக அறிவிக்க வேண்டும். இல்லையெனில் வரும் ஜனவரி மாதம் 21ம் தேதி தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் உரிமை மீட்பு அறப்போர் நடத்தப்படும்" எனத் தெரிவித்துள்ளார்

மேலும், கடந்த 15 ஆண்டு காலமாக நடைபெறும் இந்த அறப்போர் இறுதியில் ஜல்லிகட்டு போராட்டம் போல் வெற்றியை பெறும் எனவும் கள் தடை நியாயமானது என நிருபித்தால் அவர்களுக்கு ரூ.10 கோடி பரிசு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க || ரயில் ஏறும் போது தவறி விழுந்து கல்லூரி மாணவர் படுகாயம்!