என்.எல்.சி விவகாரம்: வாய்க்கால் தோண்டும் பணி 6 வது நாளாக தீவிரம்...!

என்.எல்.சி   விவகாரம்:    வாய்க்கால் தோண்டும் பணி 6 வது நாளாக தீவிரம்...!

கடலூர் மாவட்டம் மேல்வளையமாதேவி சுற்றுவட்டார பகுதியில் என்எல்சி நிறுவனம் 6 வது நாளாக வாய்க்கால் தோண்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

கடலூர் மாவட்டம் என்எல்சி வாய்க்கால் தோண்டும் பணி- வளையமாதேவி கிராமத்தில் 6 வது நாளாக தொடரும் பணி கூடுதல் ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு விரைந்து முடிக்க தீவிரமாக கால்வாய் பணி பலத்த போலீசார் பாதுகாப்போடு நடைபெற்று வருகிறது.

நெய்வேலி என்.எல்.சி. நிர்வாகம் 2 சுரங்க விரிவாக்க பணிக்காக கரிவெட்டி, மேல்வளையமாதேவி, கீழ் வளையமாதேவி, ஆதனூர் உள்ளிட்ட கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்தியது. இந்த நிலையில் கடந்த 26 -ம் தேதி புதிய பரவனாற்றுக்கு வாய்க்கால் வெட்டும் பணிக்காக வளையமாதேவி கிராமத்தில் உள்ள விளை நிலங்களில் சாகுபடி செய்த பயிர்கள் பொக்லைன் எந்திரங்கள் மூலம் அழிக்கப்பட்டன.

தொடர்ந்து பல அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், ஐந்து நாட்களில் கடலூர் மாவட்டத்தில் 28 பேருந்துகள் மீது மர்ம நபர்களால்  கல் வீச்சு சம்பவம் அரங்கேறி வருகிறது. மேலும், வளையமாதேவியில் அரசியல் கட்சிகள் விவசாயிகளை சந்திக்க வருவதாக வந்த தகவல்களைத் தொடர்ந்து, வளையமாதேவி கிராமத்தில் பாதுகாப்பை பலப்படுத்தி தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று 6 வது நாளாக காலை மேல்வளையமாதேவியில் பொக்லைன் 10 க்கு மேற்பபட்ட ஜேசிபி எந்திரங்கள் மூலம் வாய்க்கால் வெட்டும் பணி மற்றும் மேல் வளையமாதேவி கிராமத்தில் இரவு முழுவதும் விடிய விடிய பலத்த போலீசார் பாதுகாப்போடு பணி நடைபெற்றது.

விரைந்து முடிக்க திட்டமிட்டு மும்முறமாக என்எல்சி பணியை மேற்கொண்டு வரும் நிலையில் முன்பு வெட்டிய அளவைவிட தற்போது கால்வாயை அகலப்படுத்தி பணி நடைபெற்று வருவதால் விளை நிலங்கள் அதிக அளவு பாதிப்பு ஏற்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதையும் படிக்க    |  NLC விவகாரம்; மக்களை சந்திக்க கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.க்களுக்கு தடை!