NLC விவகாரம் : மாநிலங்களவையில் அதிமுக நோட்டீஸ்..!

NLC விவகாரம் : மாநிலங்களவையில் அதிமுக நோட்டீஸ்..!

என்.எல்.சி விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் அதிமுக எம்.பி., சி.வி.சண்முகம் நோட்டீஸ் அளித்தார். 

நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தின் 2வது சுரங்க விரிவாக்கப் பணியின் ஒரு பகுதியாக, பரவனாறு விரிவாக்க வாய்க்கால் வெட்டும் பணி தொடங்கியது. வளையமாதேவியில் 2 மாதத்திற்குள் அறுவடை செய்யவிருந்த நெற்பயிர்களை ஜே.சி.பி இயந்திரங்கள் கொண்டு அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து போராட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க : தன்னைத் தானே மாய்த்துக் கொண்ட கொலை குற்றவாளி...!

இதனைத்தொடர்ந்து, என்.எல்.சியின் விரிவாக்க பணியினை கண்டித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே, பாமகவின் போரட்டத்தின் எதிரொலியாக, என்.எல்.சி நிறுவனம் தனது விரிவாக்கப் பணியை நிறுத்தி வைத்துள்ளது. 

இந்நிலையில் என்.எல்.சி விவகாரத்திற்காக 25 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாகக் கூறி, மாநிலங்களவையில் விரிவான விவாதம் நடத்த அனுமதிக்கக் கோரி அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் நோட்டீஸ் அளித்துள்ளார்.