செவிலியர்கள் 600 க்கும் மேற்பட்டோர் இரவு முழுவதும் உண்ணாவிரத போராட்டம்!

சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் எம்.ஆர்.பி கோவிட் செவிலியர்களுக்கு உயர்நீதிமன்ற உத்தரவின்படி பணி நியமனம் வழங்க வேண்டும் என 600 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்போராட்டத்தில் கலந்துகொண்ட  எம்.ஆர்.பி கோவிட் செவிலியர் சங்கத்தின் உதயகுமார் பேசுகையில், 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வில் தேர்ச்சி பெற்று தகுதியின் அடிப்படையில் 2020 ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் பணியாளர்களாக பணியில் ஈடுபட்டனர். 2022 ஆம் ஆண்டு பணி நீக்கம் செய்யப்பட்டு தகுதியற்ற முறையில் இருப்பதாக அமைச்சர் விளக்கம் அளித்தார். மதிப்பெண் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு பணியில் அமர்த்தப்படும் என கூறியவர் பணி நிரந்தரம் செய்யாததால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். 

அதன்பின் பணி வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கிய பிறகும் 47 நாட்களுக்குள் பணி வழங்க வேண்டும் எனக் கூறியது. ஆனால் இதுவரை பணி ஆணை வழங்காத காரணத்தினால் பலமுறை அமைச்சரை சந்தித்தபோதும் முறையான பதில் அளிக்கவில்லை. தேர்தல் வாக்குறுதி 356 இல் கொரோனா செவிலியர்கள் பணி நியமனம் செய்வோம் என வாக்குறுதி அளித்தனர். பெண்களுக்கான அரசு திமுக அரசு எனக் கூறுகின்ற போது இது இதுபோன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட வைப்பது வருத்தம் அளிக்கிறது. முதலமைச்சர் எங்களுக்கான பணி நியமன ஆணையை வழங்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகிறோம் என தெரிவித்தார்.

6000க்கும் மேற்பட்ட செவிலியர்கள் மூன்று நாட்களுக்குள் பணியில் சேர வேண்டும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டு பணியில் சேர்ந்தோம். ஆனால் மூன்றாயிரம் பேருக்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டு நிரந்தர பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது மீதமுள்ளவர்களுக்கு பணி நியமான வழங்கவில்லை. அதிமுக ஆட்சியில் பணி நியமன அணை வழங்கப்பட்டதால் தற்போது பணி நியமனம் வழங்க தயங்குகிறார்கள் திமுக என கேள்வி எழும்புகிறது எனக் கூறினார். 

இதையும் படிக்க: உலகின் மிக பெரிய இந்து கோயில் அக்டோபரில் திறப்பு..!