ஈழத் தமிழர்களின் பாதுகாப்பு... சட்டமன்றத்தில் குரல் எழுப்பப்படும்... அமைச்சர் செஞ்சி மஸ்தான் உறுதி...

ஈழ தமிழர்களின் பாதுகாப்பிற்காக தொடர்ந்து சட்டமன்றத்தில் குரல் எழுப்பப்படும் என்று அமைச்சர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.

ஈழத் தமிழர்களின் பாதுகாப்பு... சட்டமன்றத்தில் குரல் எழுப்பப்படும்... அமைச்சர் செஞ்சி மஸ்தான் உறுதி...

சென்னை பசுமைவழி சாலையில் உள்ள சிறுபான்மை துறை அமைச்சர் செஞ்சி.மஸ்தான் அவர்களை இயக்குனரும், தமிழ் பேரரசு கட்சி தலைவர் கவுதமன் இலங்கை வாழ் தமிழர்களோடு சேர்ந்து நேரில் சந்தித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மஸ்தான்,

தமிழகத்தில் உள்ள முகாம்களில் வாழும் இலங்கை வாழ் தமிழர்களின் தேவைகளை கேட்டறிந்து அவர்களின் அடிப்படை மற்றும் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகளை தமிழக முதல்வர் பூர்த்தி செய்து வரும் வகையில் பல்வேறு திட்டங்களை அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் தங்களின் சட்டரீதியான பாதுகாப்பான நிலைகளை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும் அதிலிருந்து விடுவிக்க வேண்டும் தங்களது பிள்ளைகளை கல்விகற்கும் நிலையில் ஏற்பட்டுள்ள தடைகளை நீக்கி விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவர்களது கோரிக்கையை தமிழக முதல்வரிடம் எடுத்து சென்று இலங்கை தமிழர் பிரச்சனையில் அவர்களுக்கு பாதுகாப்பான சட்டங்களை இயற்றப்பட சட்டமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வருவோம் என்பதை உறுதியாக தெரிவித்து கொள்கிறேன்.
தொடர்ந்து பேசிய இயக்குனர் கவுதமன்,

திருச்சி முகாம்களில் இருக்கக்கூடிய இலங்கை அகதிகள் தங்கள் குடும்பத்தோடு இன்று அமைச்சரை சந்தித்தோம்.மறுவாழ்வு முகாம்களில் என்னமாதிரியான பிரச்சனைகளை அவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்  என்பதையெல்லாம் முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று பல்வேறு நலத்திட்டங்களை சட்டமன்றத்தில் அதிகாரபூர்வமாக நிறைவேற்றி உள்ளார்கள்.

சிறப்பு முகாம்களில் இருக்கும் பாஸ்போர்ட் வழக்குகள் உட்பட மற்ற வழக்குகளையும் விரைவாக முடித்து முதல்கட்டமாக அந்த பாஸ்போர்ட் வழக்குகளில் இருந்து அவர்களை விடுவிக்கும் ஏற்பாடுகள் அனைத்தும் நடந்து கொண்டுள்ளதாகவும் விரைவில் அவர்கள் விடுதலை ஆவார்கள் என்றும் கூறியுள்ளார்.

ஈழ பிள்ளைகள் படித்து உயற்பதவியில் வரவேண்டும் அதற்கான இரட்டை குடியுரிமையை நாங்கள் கொண்டு வருவோம் என்று சொல்லி அதர்க்கும் அமைச்சர் அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைத்து அடுத்த கட்ட பணிகளும் துவங்கி உள்ளது.மீண்டும் எங்கள் ஈழ தமிழர்களின் வாழ்வில் ஒரு ஒளியேற்றுவதற்கான நம்பிக்கையை எங்களுக்கு கொடுத்துள்ளார்.