பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த அமைச்சர் பொன்முடி...வெளிநடப்பு செய்த பாமக எம்.எல்.ஏக்கள்!

பட்டமளிப்பு  விழாவை புறக்கணித்த அமைச்சர் பொன்முடி...வெளிநடப்பு செய்த பாமக எம்.எல்.ஏக்கள்!

சேலம் பெரியார் பல்கலைகழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவை அமைச்சர் பொன்முடி புறக்கணித்த நிலையில் பாமக எம்எல்ஏக்கள் இருவர் வெளிநடப்பு செய்தனர்.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 21-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி பல்வேறு பாடப்பிரிவுகளில் தங்கப்பதக்கம் பெற்ற மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இந்த விழாவை அமைச்சர் பொன்முடி புறக்கணித்த நிலையில், மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.  

இதையும் படிக்க : ”எப்படி இருக்கீங்க செந்தில் பாலாஜி?” நீதிபதியின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்!

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் அருள் மற்றும் சதாசிவத்திற்கு முறையாக இருக்கைகள் ஏதும் ஒதுக்கீடு செய்யவில்லை என இருவரும் அங்கிருந்து வெளிநடப்பு செய்ததால், விழா அரங்கில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது. இதுகுறித்து பேசிய எம்எல்ஏ சதாசிவம், பெரியார் பல்கலைக்கழகம் அமைந்துள்ள மேற்கு சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ-வுக்கு கூட முறையான அழைப்பு தரவில்லை எனறார். 

முன்னதாக  நிகழ்ச்சியில் பங்கேற்க சேலம் வருகை தந்த ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்பட்டது. மதிமுக, விசிக, திக உள்ளிட்ட பல்வேறு  அமைப்புகளை சேர்ந்த 500 க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆளுநருக்கு எதிராக முழக்கமிட்டனர்.