”எப்படி இருக்கீங்க செந்தில் பாலாஜி?” நீதிபதியின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்!

”எப்படி இருக்கீங்க செந்தில் பாலாஜி?” நீதிபதியின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்!

சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜூலை 12ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் ஜூன் 14ம் தேதி அதிகாலை, அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். உடல் நலக் குறைவு காரணமாக அவர், ஓமந்தூரார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்றைய தினம் பிற்பகல், மருத்துவமனைக்குச் சென்ற சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியை நேரில் பார்வையிட்டு, அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு, இதய அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. 

இதையும் படிக்க : 2 ஆண்டுகளில் பல லட்சம் மனுக்களுக்கு தீர்வு...முதலமைச்சர் பெருமிதம்!

இந்நிலையில், அவரது நீதிமன்ற காவல் இன்று முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, காவேரி மருத்துவமனையில் இருந்து காணொலி காட்சி மூலம் செந்தில் பாலாஜி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம், எப்படி இருக்கிறீர்கள் என நீதிபதி அல்லி கேள்வி எழுப்பினார். அதற்கு வலி இருப்பதாக செந்தில் பாலாஜி பதிலளித்தார்.  இதை தொடர்ந்து, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜூலை 12ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.