ஓட்டப்பயிற்சியின் போது டீ கடைக்கு விசிட் அடித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன்...

தர்மபுரி மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்துள்ள போது சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரணியன் இன்று காலை ஓட்டப்பயிற்சியில் ஈடுபட்டார். 

அப்பொழுது, அதகப்பாடி கிராமத்தில் தேநீர் கடைக்கு சென்று, அங்கு உள்ளவர்களிடம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டீர்களா என கேட்டு, தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். 22ஆண்டுகளாக எனக்கு நீரிழிவு நோய் உள்ளது, ரத்த அழுத்தம் உள்ளது. ஆனால் தடுப்பூசியை செலுத்திக்கொண்டேன். நம்மை போன்று நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் முதலில் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும், 2 டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டால் 97.5 சதவீதம் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.  இதனால் 3ம் அலை வந்தாலும் அதிலிருந்து நம்மாள் தப்பிக்க முடியும் எனவும், தடுப்பூசி செலுத்தும் முன்பே உடல் பரிசோதிக்கப்படும் எனவும் விளக்களித்தார்.