அறிவிப்புகளை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்... அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்...

திராவிடக் களஞ்சியம் குறித்து தேவையற்ற குழப்பத்தை உருவாக்க முயற்சிக்க வேண்டாம் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.

அறிவிப்புகளை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்... அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்...

திராவிடக் களஞ்சியம் குறித்த சர்ச்சை தேவையற்ற ஒன்று என, அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் வளர்ச்சித்துறையில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இரண்டு அம்சங்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

முதலாவது இளைய தலைமுறையினருக்கு சங்க இலக்கிய செல்வத்தை கொண்டு சேர்க்கும் வகையில் பிரிக்கப்பட்டு எளிமையான பதிப்புகள் வெளியிடப்படும் என்றும், 2-வதாக திராவிடவியல் அறிஞர்கள் எழுதிய தலையங்கங்கள், கதைகள், கவிதைகள் உள்ளிட்டவைகளை தொகுத்து திராவிட களஞ்சியம் என்ற பெயரில் தனி நூலாக வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

அறிவிப்புகளை தெளிவாக புரிந்து கொள்ளாமல் யாரும் தேவையற்ற குழப்பங்களை உருவாக்க முயற்சிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.