அனைத்து ஞாயிற்றுகிழமைகளிலும் மெட்ரோ ரயில் இயங்கும்!

இன்று முதல் அனைத்து ஞாயிற்றுகிழமைகளில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை 10 நிமிடங்களுக்கு ஒருமுறை கூடுதல் மெட்ரோ இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. 

கொரொனா 2 ஆம் அலை காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தபோது சென்னையில் நேற்று வரை மெட்ரோ ரயில் இயங்குவதை நிறுத்தி வைத்திருந்தது. தற்போது கொரொனா பாதிப்பு படிபடியாக குறைந்து வரும் நிலையில் ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது. இந்த நிலையில் கடந்த 21-ம் தேதி முதல் பொதுமக்களுக்காக மெட்ரோ ரயில் கூடுதல் பாதுகாப்புடன் இயக்க மெட்ரோ நிர்வாகம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும்,  இனி வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அரசு விடுமுறைகளில் கூடுதலாக காலை 7 மணி இரவு முதல் 9 மணி வரை 10 நிமிடங்களுக்கு ஒரு முறை அனைத்து வழித்தடங்களிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ நிறுவனம் தெரிவித்திருக்கிறது.  பொதுமக்கள் உரிய பாதுகாப்புடன் முகக் கவசம், தனிமனித இடைவெளியை கடைபிடித்து மெட்ரோ ரயிலில் பயணிக்க வேண்டும் எனவும் அப்படி விதிமுறைகளை பின்பற்றாதவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவித்து இருந்த நிலையில் கடந்த 21ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை விதிமுறைகளை பின்பற்ற அவர்களிடமிருந்து 2600 ரூபாய் அபராதம் பெற்றிருப்பதாக மெட்ரோ நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.