தனியாருக்கு குத்தகை விடப்பட்ட சரக்கு ரயில் பெட்டிகள்... வியாபாரிகள் (ம) விவசாயிகள் அவதி!

சரக்கு ரயிலின் பெட்டிகள் தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டதால் தென்மாவட்ட வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

தனியாருக்கு குத்தகை விடப்பட்ட சரக்கு ரயில் பெட்டிகள்... வியாபாரிகள் (ம) விவசாயிகள் அவதி!

கன்னியாகுமரியில் இருந்து டெல்லி செல்லும் திருக்குறள் எக்ஸ்பிரஸ், சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களில் தென் மாவட்ட விவசாயிகள், வட மாநிலங்களுக்கு காய்கனிகளை ஏற்றி அனுப்பி வருகின்றனர்.

திண்டுக்கல், தேனி பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மூலம் சுமார் 20 லட்ச ரூபாய் வரை இந்திய ரயில்வேவிற்கு வருமானம் வந்ததாகக் தெரிகிறது.

இந்த நிலையில், நேற்று முதல் திடீரென சரக்கு ஏற்றும் பெட்டிகளை மட்டும் ரயில்வே நிர்வாகம் தனியாருக்கு குத்தகைக்கு விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் தென் மாவட்டங்களில் இருந்து காய்கறிகளை அனுப்பி வைக்க முடியாமல் வியாபாரிகள் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும், எந்த முன்னறிவிப்பும் இன்றி தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.