மன்னார்குடி : பாப்பாரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்...! திரளான பக்தர்கள் பங்கேற்பு...!

மன்னார்குடியில் பழமை வாய்ந்த பாப்பாரகாளியம்மன் கோவில் புதிப்பிக்கபட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

மன்னார்குடி : பாப்பாரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்...! திரளான பக்தர்கள் பங்கேற்பு...!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகா அலுவலக சாலையில் பாப்பார காளியம்மன் என்ற பழமை வாய்ந்த கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. மன்னார்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்திருக்கிறது, இந்த பாப்பார காளியம்மன் கோவில். இக்கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம், இன்று காலை நடத்தப்பட்டது. 

இதனை முன்னிட்டு மூன்று தினங்களுக்கு யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு வந்தது. இன்று காலை 10 மணி அளவில் யாகசாலையில் பூஜைகள் நிறைவு செய்யப்பட்டு, புனித கடம் புறப்பாடு நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கோபுர விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதே போல கோவிலின் உள்ளே அருள் பாலிக்கும் விநாயகர், முருகன், நாகம்மாள் மற்றும் பாப்பார காளியம்மன் மூலவர் சாமிக்கும் புனித கலசங்களில் நீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.