திருமண உதவி தொகை முறைகேடு; விரைவில் விசாரணை; துணை மேயர் உறுதி! 

திருமண உதவி தொகை முறைகேடு; விரைவில் விசாரணை; துணை மேயர் உறுதி! 

திருமண உதவித் தொகை திட்டம் முறைகேடு குறித்து கணக்கு குழு தலைவரிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. விரைவில் அதன் மீதான விசாரணை தொடங்கும் என சென்னை மாநகராட்சி துணை மேயர் பேட்டியளித்துள்ளார்.

கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தை தர்மபுரியில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து சென்னையில் பல்வேறு இடங்களில் சிறப்பு முகாம்களை சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார் ஆய்வு செய்தார்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னை முழுவதும் மூன்று கட்டமாக சிறப்பு முகாம்களை நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். சென்னையில் 1700 க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு முகாம்கள் இன்று நடைபெறுகிறது.  சர்வர் கோளாறின் காரணமாக சிறிய தாமதம் ஏற்பட்டிருக்கிறது விரைவில் அது சரி செய்யப்படும் என்று தெரிவித்தார்

மேலும், திருமண நிதி உதவி திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாகவும் கொரோனா காலத்தில் அம்மா கிளினிக் தடுப்பூசிகளை தனியாருக்கு விற்பனை செய்திருப்பதாகவும் இதன் காரணமாக சென்னை மாநகராட்சிக்கு நிதி இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் கணக்கு குழு தலைவர் தெரிவித்திருப்பது தொடர்பாக அவரிடம் அறிக்கை கேட்டிருக்கிறோம் விரைவில் அது குறித்த விசாரணை தொடங்கும் என தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க:கனிமொழி குறித்து அவதூறு பேச்சு; முன்னாள் எம்.எல்.ஏ கைது!