மகாகவி பாரதியார் இன்றைக்கும் தேவைப்படுகிறார்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மகாகவி பாரதியார் இன்றைக்கும் தேவைப்படுகிறார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

மகாகவி பாரதியார் இன்றைக்கும் தேவைப்படுகிறார்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை திருவல்லிக்கேணியில் பாரதியார் நினைவு நாள் நூற்றாண்டு விழாவை, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாரதிச் சுடரை ஏற்றி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, மாநிலங்களுக்கான பண்பாடு மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை மத்திய இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுதா சேஷய்யன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக பாரதியார் நினைவு இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல ஆயிரம் சிந்தனைகளை கொண்ட மகாகவியின் எண்ணங்கள், சுதந்திர சிந்தனைகளைக் கொண்டது எனப் புகழாரம் சூட்டினார். குடும்பமாக இருந்தாலும் சரி, சாதியாக இருந்தாலும் சரி, அடக்குமுறைகளைக் கேள்வி கேட்டவர் பாரதியார் எனக் கூறிய முதலமைச்சர், பாரதியாரின் அச்சிட்ட புத்தகங்கள் மறைந்தாலும், மக்கள் மனதில் உள்ள நினைவுகளை வைத்து புத்தகம் படைக்கலாம் என்றார். மேலும், மகாகவி பாரதி இன்றைக்கும் தேவைப்படுகிறார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.