சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்கிய வழக்கில்...எம்.பி. கார்த்தி சிதம்பரத்தின் உதவியாளர் பாஸ்கர் ராமன் கைது!

நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்தின் நெருங்கிய கூட்டாளியும், உதவியாளருமான பாஸ்கர் ராமனை சிபிஐ கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. 

சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்கிய வழக்கில்...எம்.பி. கார்த்தி சிதம்பரத்தின் உதவியாளர் பாஸ்கர் ராமன் கைது!

ஐஎன்எஸ் மீடியா முறைகேடு வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர் ராமனை ஏற்கனவே கைது செய்து, அவருடன் தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. அந்த ஆவணங்கள் அடிப்படையில் சிபிஐ வழக்கு பதிந்து விசாரித்தபோது,  பஞ்சாப் மாநிலத்தில் தல்வாண்டி சபோ மின் நிறுவனத்துக்கு வேலைக்கு அமர்த்தப்பட்ட 250 சீனர்களுக்கு முறைகேடாக விசா  வழங்கப்பட்டது தெரியவந்தது. மேலும் ப.சிதம்பரம் அமைச்சராக இருந்தபோது நடைபெற்ற இந்த முறைகேட்டில் 50 லட்சம் வரை விசா வழங்க லஞ்சம் பெறப்பட்டதும், இதில் கார்த்தி சிதம்பரத்திற்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. 

இதையடுத்து, நேற்று முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், காங்கிரஸ் எம். பியுமான கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான சென்னை, கர்நாடகா, டெல்லி ஒடிசா உள்ளிட்ட 10 இடங்களில்  சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா என்ற தகவல் வெளியாகவில்லை.

இருப்பினும் கார்த்திக் சிதம்பரம், நெருங்கிய கூட்டாளியான ஆடிட்டர் பாஸ்கர் ராமன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிந்துள்ளது. இதுதவிர சில அரசு அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விசா முறைகேடு தொடர்பான வழக்கில் கூடுதல் தகவல்களை திரட்ட ஆடிட்டர் பாஸ்கர் ராமனை சிபிஐ அதிகாரிகள் நேற்று மீண்டும் கைது செய்தனர்.