முத்துமாரியம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம்!!!

மரக்காணம் அருகே ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

முத்துமாரியம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம்!!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கீழ்பேட்டை கிராமத்தில் புதிதாக எழுந்தருளியுள்ள ஸ்ரீமுத்துமாரி அம்மன் ஆலய கும்பாபிஷேக விழா மிகச்சிறப்பான முறையில் நடைபெற்றது. இதில் 108 கும்ப கலசங்கள் வைக்கப்பட்டு சிறப்பு யாகங்கள் நடத்தி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

மேலும், இந்த ஆலயத்தில் மகாகணபதி, முத்துமாரியம்மன், பாலமுருகன், மதுரைவீரன், துர்க்கை அம்மன், தக்ஷிணாமூர்த்தி மற்றும் நவகிரகங்கள் உள்ளிட்ட தெய்வங்களின் விக்கிரகங்களுக்கும் குடமுழுக்கு நடத்தப்பட்டது.

காலை முதல் அம்மன் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்களுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். மேலும், இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு தொடர் அன்னதானங்களும் நடைபெற்றது.

மேலும் படிக்க | சகல பூஜைகளுடன் நடந்து முடிந்த ஸ்ரீ பொம்மி கோவிலின் கும்பாபிஷேகம்!!!