27ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு...!

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 27ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும், இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து  29-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 27ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும், இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து  29-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : ராஜஸ்தானில் விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு...!

மேலும், கடலூர், நாகை, தஞ்சாவூர், ராமநாதபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 30ம் தேதி  வரை தமிழ்நாடு மற்றும் புதுவையில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து,  செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் நேற்று உத்தரவிட்டது. இந்நிலையில் இன்று சென்னை, திருவள்ளூர், திருவாரூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.