"லோக் ஆயுக்தா கூட்டம்".. முதலமைச்சர் தலைமை.. முக்கிய தலைவர்கள் பங்கேற்பு.. ஆப்சென்ட் ஆன எடப்பாடி பழனிசாமி!!

லோக் ஆயுக்தா கூட்டம், சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் பங்கேற்கவில்லை.

"லோக் ஆயுக்தா கூட்டம்".. முதலமைச்சர் தலைமை.. முக்கிய தலைவர்கள் பங்கேற்பு.. ஆப்சென்ட் ஆன எடப்பாடி பழனிசாமி!!

ஊழலை ஒழிக்கும் வகையில் லோக் ஆயுக்தா அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து,  கடந்த ஆண்டு ஜூலை மாதம் சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா அமைப்புக்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

முதலமைச்சர், சட்டப் பேரவைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரைக் கொண்ட தெரிவுக் குழு, மூன்று நபர்களைக் கொண்ட தேடுதல் குழுவை அமைத்தது. அந்த குழு பரிந்துரைப்படி, லோக் ஆயுக்தாகுழுவின் தலைவராக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தேவதாஸ் நியமிக்கப்பட்டார்.

சட்டத்துறை உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற நீதிபதிகள் கே.ஜெயபாலன், ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் நீதித்துறை அல்லாத உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜாராம், அரசு வழக்கறிஞர் ஆறுமுகம் ஆகியோரும் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில், லோக் ஆயுக்தா கூட்டம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு மற்றும் குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தேவதாஸ் உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்கவில்லை.