தந்தை ஸ்தானத்தில் இருந்து சொல்கிறேன்.. காலை உணவை தவறாமல் எடுத்து கொள்ளுங்கள் - பள்ளி மாணவர்களுக்கு முதல்வர் அறிவுரை

தந்தை ஸ்தானத்தில் இருந்து சொல்கிறேன்.. காலை உணவை தவறாமல் எடுத்து கொள்ளுங்கள் - பள்ளி மாணவர்களுக்கு முதல்வர் அறிவுரை

குழந்தைகள் தவறாமல் காலை உணவை எடுத்து கொள்ள வேண்டும் என தந்தையின் ஸ்தானத்தில் இருந்து கேட்டுக்கொண்டுள்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

விழிப்புணர்வு ஊர்தி:

பள்ளி மாணவர்களுக்கு உடல்நலம், மனநலம் சார்ந்த ஆலோசனைகளை வழங்கும் விழிப்புணர்வு ஊர்தியை முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை அசோக்நகரில் உள்ள மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் 805 வாகனங்கள் மூலம் 3 மாதங்களுக்கு மருத்துவக் குழுவினர் வாயிலாக மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளது.

தவறாமல் காலை உணவு சாப்பிட வேண்டும்:

இதற்கென ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், தனது பள்ளி பருவ நினைவுகளை பகிர்ந்து கொண்டு மாணவர்கள் அனைவரும் தவறாமல் காலை உணவு சாப்பிட வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் சோம்பேறித்தனம் இருக்கக்கூடாது என அறிவுறுத்திய அவர், மாணவர்கள் உடற்பயிற்சி செய்து, தன்னம்பிக்கையை வளர்த்து கொள்ள வேண்டும் என கூறினார்.