தொழிலாளர் சட்ட திருத்த மசோதா திமுக கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு

தொழிலாளர் சட்ட திருத்த மசோதா திமுக கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு

தொழிலாளர் சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து விசிக, சிபிஐ, சிபிஎம், மதிமுக ஆகிய கட்சிகள் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விசிக சட்டமன்ற குழு தலைவர் சிந்தனை செல்வன்,தொழிலாளர் திருத்த சட்ட மசோதா நீண்ட நெடிய தொழிலாளரின் உரிமை போராட்டத்திற்கு எதிராக அமையும் எனவும் ஒன்றிய அரசின் வேளாண் சட்டத்திற்கு எப்படி எதிர்ப்பு இருந்ததோ அதற்கு இணையான எதிர்ப்பு நாடு முழுவதும் தொழிலாளர் சட்ட மசோதாவுக்கு  உள்ளது எனவும் தெரிவித்தார். 

மேலும், இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால் கலைஞர் கொண்டு வந்த அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான நலன் பாதிக்கப்படும் என்பதால் இந்த சட்டத்தை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய பொதுவுடைமைக் கட்சி, இந்திய பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்), மனித நேய மக்கள் கட்சி, மறுமலர்ச்சி திமுக ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளோம் என்றார்.  

எங்களது எதிர்ப்புகளையும் தாண்டி இந்த மசோதா நிறைவேற்றப்படுவதை கண்டித்து வெளிநடப்பு செய்துள்ளோம் எனக் கூறிய அவர் தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டலுக்கு இந்த சட்டம் வழி வகுக்கும் எனவே இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழக அரசை வலியுறுத்துகிறோம் என தெரிவித்தார்.