கீழடி அருங்காட்சியகம் ஜனவரியில் திறப்பு - அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

கீழடி அருங்காட்சியகம் ஜனவரியில் திறப்பு - அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

கீழடியில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியக கட்டிட பணிகளை அமைச்சர்கள் எ.வ.வேலு, மூர்த்தி, பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி, எம்எல்ஏ தமிழரசி உள்ளிட்டோர் இன்று பார்வையிட்டனர். கட்டிட பணிகள் மற்றும் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்தும் பணிகள் குறித்த வீடியோ காட்சிகளை பார்வையிட்டனர். பின் அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

அப்போது பேசிய அவர், கீழடியில் தமிழக தொல்லியல் துறை அகழாய்வு மூலம் கிடைத்த பொருட்களை காட்சிப்படுத்த உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம், 11 கோடியே மூன்று லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. மேலும், கட்டுமான பணிகள் நிறைவு பெற்றன. பொருட்களை காட்சிப்படுத்தும் பணி நடைபெற உள்ளது. இந்த பணிகள் தாமதமாக நடைபெறுவதாக குற்றச்சாட்டு உள்ளது. தாமதம் ஆவதும் நல்லதிற்கு தான், தற்போது வரை கிடைக்கும் பொருட்களையும் காட்சிப்படுத்தலாம். ஆட்சிக்கு வந்து 15 மாதங்கள் தான் ஆகிறது. ஜனவரி 2023க்குள் காட்சிப்படுத்தும் பணி நிறைவடையும். அதன்பின் சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதி வழங்கப்படும் என கூறினார்.