முழுக் கொள்ளளவை எட்டிய கருப்பாநதி அணை... கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை...

கடையநல்லூர் கருப்பா நதி முழுக் கொள்ளளவை எட்டியதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்க விடப்பட்டுள்ளது.

முழுக் கொள்ளளவை எட்டிய கருப்பாநதி அணை... கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை...

வடகிழக்கு பருவமழை ஆனது தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக பெய்து வரும் கனமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஒட்டியுள்ள அணைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து அதிகமாக காணப்படுகிறது.

அதே போல், தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகேயுள்ள சொக்கம்பட்டி கருப்பாநதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக பெய்து வரும் கனமழை காரணமாக அணையானது முழு கொள்ளளவை தற்போது எட்டியுள்ளது.

இந்த நிலையில், இன்று அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக அணைக்கு இன்று மதியம் ஒரு மணி அளவில் சுமார் 3500 கன அடி நீர் வந்தது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

இந்த நிலையில், தற்போது சற்று மழை குறைவாக காணப்படுவதால் படிப்படியாக நீர்வரத்து குறைந்து 2 ஆயிரத்து 500 கன அடி நீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. தற்போது அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருவதால் ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆறுகளில் ஓரம் உள்ள ஊர் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.