" கர்நாடக தேர்தல் முடிவுகள்: மதவாத சக்திகளுக்கு எச்சரிக்கை.." - ராமச்சந்திரன்.

" கர்நாடக தேர்தல் முடிவுகள்:  மதவாத சக்திகளுக்கு எச்சரிக்கை.."  - ராமச்சந்திரன்.

மதவாத சக்திகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் கர்நாடகா மாநில தேர்தல் அமைந்துள்ளது என சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி. தெரிவித்துள்ளார். 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில்;  " தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களின் ஆஷா பணியாளர்களின் இரண்டு நாட்கள் மண்டல மாநாடு ஓசூரில் நடைபெற்றது வருகிறது. இவர்களுக்கு மற்ற மாநிலங்களை விட குறைவான ஊதியம் வழங்க பட்டு வருகிறது கொரோன பெருந்தொற்று காலத்தில் இவர்களின் பணி மிகவும் முக்கியமானதாக இருந்தது; தங்களின் உயிரையும் பொருட் படுத்தாமல் பணிகளை மேற்கொண்டனர்; இவர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்",  என்று கூறினார். 

இதையும் படிக்க     }  "விவசாயிகளிடம் மூட்டைக்கு 60, 70 ரூபாய் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை......" - அன்புமணி ராமதாஸ்.

மேலும், நடைபெற்ற கர்நாடகா மாநில தேர்தல் காங்கிரஸ் வெற்றி பெறுவது மதவாத சக்திகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் உள்ளது என்றும்,  நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் இது எதிர் ஒலிக்கும் எனவும் கூறினார். அதோடு, அனைத்து மதங்களும் ஒன்றிணைந்து வாழும் நாட்டில் மத உணர்வை ஏற்படுத்தி மக்களை துண்டாட நினைக்கும் பாஜக, RSS -ன்  எண்ணத்தை கர்நாடகா மக்கள் சிதைத்து உள்ளனர் என்றும் கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், "ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு போன்ற திட்டங்களை கொடுத்து மதச்சார்பற்ற நாட்டில் மக்களை பிளவு படுத்தும் பிஜேபி RSS எண்ணத்தை மக்கள் வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் ஏற்க மாட்டார்கள்", என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க     }  கர்நாடக முதலமைச்சா் யாா்? டெல்லி விரையும் தலைவர்கள்!